நாம் கொரோனாவில் இருந்து தப்பிக்க வெளியே செல்லும் போது மாஸ்க் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியை மேற்கொள்ளுதல் போன்ற பல விஷயங்களை நாம் செய்தாலும் நம்முடைய நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கவும் முயல வேண்டும். அப்பொழுது நம் உடலில் இயற்கையாகவே உருவாகும் ஆன்டி பாடகிகள் கொரோனோ போன்ற அந்நிய வைரஸை நம் உடலினுள் நுழைய விடாமல் தடுக்கும். இதன் மூலம் தொற்று நோயில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். இயற்கையிலேயே நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. சமீபத்தில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI), வைட்டமின் சி நிறைந்த உணவுகளின் பட்டியலைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தது. அந்த உணவுகளை நாம் தினசரி எடுத்து வரும் போது நம் நோயெதிரிப்பு சக்தி அதிகரிக்கிறது. அப்படி எந்த வகையான உணவுகள் நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள் என்பதை அறிந்து கொள்வோம். நெல்லிக்காய் நெல்லிக்காய் இந்தியாவின் சிறந்த பழமாகும். இது ஊட்டச்சத்துக்களால...
InfoTamizha | Box office Collection | TamilNadu Youtubers | Offers | Product Review | Information