கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார். அப்போது கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மாலை 6 மணிக்கு அமலாகும் இந்த உத்தரவு மார்ச் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
144 தடை உத்தரவும் இன்று மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டஙக்ளை முடக்க மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. மேலும், வெளி நாடுகளிலிருந்து வந்த பயணிகள் வெளியில் உலாவுவதாகவும் அரசு உத்தரவை மீறினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தத.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
Your views....