நேர்கொண்ட பார்வை அஜித் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் அடுத்த வாரம் 8ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர், இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் முன்பதிவு நேற்று தொடங்கியது.
இதில் சென்னை காசி திரையரங்கம் புக்கிங் தொடங்கிய ஒரு சில மணி நேரத்திலேயே அனைத்து காட்சிகளும் புல் ஆகிவிட்டது.
முதல் 5 காட்சிகள் ஹவுஸ்புல் ஆக, மற்ற காட்சிகள் 95% டிக்கெட் விற்றுவிட்டது, மேலும், நள்ளிரவு 12 மணி காட்சியும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.