தமிழ் சினிமாவில் தற்போதைய டிரெண்டே பேட்ட, விஸ்வாசம் படங்கள் தான். முறையே ரஜினிகாந்த், அஜித்தின் இந்த படம் வரும் ஜனவரி 10 ல் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இதற்கிடையில் சூர்யா ரசிகர்களுக்கும் தங்கள் அபிமானத்திற்குரிய நடிகரின் படம் பற்றிய தகவல் வராதா என ஏக்கம் இருப்பது சகஜம் தானே. அப்டேட் கேட்டு படக்குழுவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். சூர்யா செல்வராகவன் இயக்கத்தின் NGK படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் இன்று நள்ளிரவு 12.10 க்கு வெளியிடப்படுகிறதாம். இந்த 2018 ல் பொங்கல் ஸ்பெஷலாக சூர்யாவுக்கு தானா சேர்ந்த கூட்டம் வெளியானது குறிப்பிடத்தக்கது. பேட்ட, விஸ்வாசம் கொண்டாட்டத்திற்கு நடுவே சூர்யா படமும் இடம் பெற்றால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே..
InfoTamizha | Box office Collection | TamilNadu Youtubers | Offers | Product Review | Information